சோலை வனம் – கவிதைகள்
இரா. பாரதி – rambharathi1940@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com
என்னுரை
தாம்
பெறும் உணர்ச்சிகளைப் பிறரும் அடையும்படிசெய்வதே கவிதை படைப்பாளியின்
நோக்கம். கவிஞன் தனது கற்பனைத் திறனை எண்வகை மெய்ப்பாடுகளை
அடிப்படையாக்கிக் கவிதை படைக்கிறான். உள்ளத்தில் இயல்பாகவே பொங்கிக்
கிடக்கும் உணர்ச்சிகளைத் தனது கற்பனைசக்தியைத் திரட்டி கவிதை ஒளிச்சிதறலாக
இவ்வுலகிற்குப் படைக்கப்படும்போதுதான் கவிதை புதுப் பரிமாணமடைகிறது.
கவிதைகள் கற்பனையாகப் படைக்கப்படுகின்றதே தவிர பிறருடைய வாழ்க்கையினைப்
பிரதிபலித்துக்காட்டுவதில்லை.புரியாத சமூகவாழ்மக்களில் பலர்
முரண்பட்டகருத்துகளை விதைப்பதினால் எழுதும் கவிஞனின் கற்பனைகள்
தடைபட்டுப்போகின்றன. இந்நிலை கவியுலகிற்குத் தேவையற்றவை. இந்நூலில்
இடம்பெற்றுள்ள கவிதைகள் இணையத் தளங்களில் வெளிவந்தவை. இக்கவிதைத் தொகுப்பு
எனது மூன்றாவது படைப்பாக வெளிவருகிறது. ஒவ்வொரு புத்தக வெளியீடும்
ஆசிரியருக்கு ஒரு குழந்தையைப் போன்றது. எனது தாயின் பெயரைப்
புனைபெயராகக்கொண்டு இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்